கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த.உயர்தர பிரிவில் இணைந்துள்ள புதிய மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று ( 4 ) கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இக் கல்லூரியிலிருந்து முதன் முதலாக பொறியியல் துறைக்கு பல்கலைக்கழகம் பிரவேசித்த மாணவரும் , தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட ஆலோசகருமான பொறியியலாளர் கலாநிதி யு .பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் ஏ.எம்.சராபத் .ஸிமரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்களான எம்.எஸ் முஹம்மட் , ஏ.பி.முஜீன் , முன்னாள் அதிபர் மர்ஜுனா ஏ காதர் , கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஸாத் ,தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர்களான பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா ,பொறியியலாளர் எம்.எம்.ஏ.ஸுஜா , தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபுபக்கர் , ,.இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் , பாடசாலை அபிவிருத்தி சபைச் செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் ,பழைய மாணவர் சங்க உப தலைவர் றிஸாத் சரீப் , கல்லூரியின் உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் உட்பட சிரேஸ்ட மாணவர்களும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புதிதாக உயர்தர பிரிவில் கல்வி கற்பதற்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளாகவும் வளவாளர்களாகவும் வருகை தந்திருந்த இக்கல்லூரியின் பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளும் ஆலோசனைகளும் மிகவும் பிரயோசமுள்ளவையாக அமைந்திருந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருத்து தெரிவித்ததுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.