எப்.முபாரக்-
களனி ஆறு பெருக்கெடுத்தமையால் மல்வானை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக ரம்புட்டான் பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புட்டான் மரங்கள் நீரிழ் மூழ்கியமையால் காய்கள் பழுதடைந்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த முறை சிறந்த அறுவடையை எதிர்பார்த்த போதிலும் வௌ்ளம் காரணமாக அவை அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரம்புட்டான் செய்கையாளர்களுக்கான இழப்பீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.