திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றிரவு (03) கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றிய மஹதிவுல்வெவ - மயான வீதியில் வசித்து வந்த டி.எம்.சிதிஜ பிரசாத் திஸாநாயக்க (23 வயது) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ம் திகதி கடமைக்கு செல்லவிருந்த நிலையில் அவர் கடமைக்கு செல்லாது தனது சகோதரரிடம் கடற்படை முகாமில் பல கொடுமைகள் தமக்கு இடம் பெறுவதாகவும் தெரிவித்ததாகவும் சகோதரர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட கடற்படையினரின் சடலம் தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதணைகளை இன்று நடாத்தவுள்ளதாகவும் பொலிஸர் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -