பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் அணுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தும்'விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம்'என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2016 நாளை(12-05-2016)வியாழன் காலை 8.30 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தலைமையில் நடைபெறவுள்ள இந்தச் சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சுசித பி வணிக சிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளர் விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம்,அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீர ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹேமந்த, கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி. கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீpம். அனுசரணையாளர் எம்.ஐ.ஏ.பரீட் (பறக்கத்டெக்ஸ்) ஆகியோருடன் அதிபர்கள் ஆசிரியர்கள் பொலிஸ் உத்தயோகத்தர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பன்னிரெண்டு முன்னணிப்பாடசாலைகளைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர் அணிகள் பங்குபற்றவுள்ளன.
இச்சுற்றுப் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு பறக்கத் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸ் வெற்றிக்கிண்ணமும், சான்றிதளும், விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது மேலும் இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
சுற்றுப் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்; மேற்கொண்டு வருகின்றார்.