இனி தில்ஷான் அவுஸ்திரேலியா பிரஜை..?

லங்கை அணி வீரர் திலகரட்ண தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப்போவதில்லையென அறிவித்துள்ளார். உபாதை காரணமாக இம்முடிவை எடுத்த தாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில் விளையாடவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்ட தாக தகவல் கசிந்துள்ளது.

இதுதவிர தில்ஷான் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் , அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடப்போவதாகவும் தகவல்கள் சில வெளியாகியுள்ளது. தில்ஷான் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஒருநாள் , இருபதுக்கு 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடி வருகின்றார். இந்நிலையில் அவர் விரைவில் தனது ஓய்வு மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -