ஓட்டமாவடியைச் சேர்ந்த கணக்கறிஞர் ரியாழுக்கு ஸ்ரீ.மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல்








நிப்றாஸ் முகம்மட் கல்குடா செய்தியாளர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருத்தரின் வெற்றிடத்திற்கு கல்குடாத் தொகுதி ஓட்டமாவடியைச் சேர்ந்த கணக்கறிஞர் றியாழ் அவர்களே நியமிக்கப்படுவார்...!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முழு நாட்டிலும் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியின்றி ஒரேயொரு பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி கட்சியின் பதிவுக்கு மெருகூட்டியது.

அது மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தேர்தல் தொகுதியிலுள்ள ஓட்டமாவடி பிரதேச சபையாகும்.

1988,1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல்களில் 99 வீதம் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து பிரதிநிதித்துவங்களை கட்சி காப்பற்றி கொள்வதற்கு வழியமை்த பிரதேசம் கல்குடாவாகும்.

1994 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து ஹிஸ்புல்லாஹ்வால் ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தால் கட்சிமாறி பாராளுமன்ற தேர்தலில் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் போட்டியிட்டபோதும் கட்சிக்காக அவரை தோற்கடித்த பிரதேசம் கல்குடாவாகும்.

2000,2001,2004 ஆகிய ஆண்டுகளில் பாரிய சவால்கள் கட்சிக்கு வந்த கால கட்டங்களில் கட்சிக்கு விசுவாசமாக பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களித்து பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொடுத்த பிரதேசம் கல்குடாவாகும்.

2005,2006,2007,2008 ஆகிய ஆண்டுகளில் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் கட்சிமாறி கல்குடாவில் அமீர் அலி என்ற அதிகாரம் இருந்தபோதும் கட்சிக்காக அவரது பின்னால் ஒன்றுபடாத சமூகம் கல்குடாவாகும்.இந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்ல்களில் மாவட்டத்தில் கட்சியின் ஆசனத்தை பல தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொடுத்த சமூகம் கல்குடாவாகும்

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அமீர் அலியை தோற்கடித்து கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தைக் காப்பாற்றியவர்கள் கல்குடா சமூகமாகும்.

2015 ஆம் ஆண்டு இவ்வருடம் நடைபெற்ற தேர்தலிலும் கல்குடா சமூகத்தின் மூன்றிலொரு பங்கு வாக்குகளை மாத்திரம்தான் அமீர் அலி அவர்களால் பெற முடிந்தன.மீதி தமிழ் சமூகத்தின் சுமார் 18.000 பதினெட்டாயிரம் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி ஊடாகப் பெற்றுக் கொண்ட வாக்குகள்தான் அவரது வெற்றியை தீர்மானித்தன.

கல்குடா முஸ்லிம் சமூகம் கட்சிக்கு பல்வேறு சவால்களை சந்தித்து சுமார் எட்டுப் பொதுக் கூட்டங்கள்,ஒரு மாநாடு ஊடாகப் பெற்றுக் கொடுத்த வாக்குகள் பத்தாயிரமாகும்.

கட்சியின் கட்டமைப்புக்கள்,அதிகாரப்பங்கீடுகள் சீர்பெறுகிறபோது கல்குடா முஸ்லிம் சமூகம் தங்களது சொந்தக்காலில் அரசியல் அதிகார ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

எந்தவொரு சமூகம்,தனது கடந்தகால வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து,அதன் விளைவுகளை ஆராயவில்லையோ,அந்த சமூகம் தோல்விகளை,தோள்களில் தாங்கிக் கொள்ளும் என்ற பேரறிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் உயர்ந்த பார்வைகளுக்கு ஏற்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர்,அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள் தனது நகர்வுகளுக்கு ரஸூலுல்லாஹ்வின் மக்கா வாழ்க்கை,மதீனா வாழ்க்கை ஆகிய காலப்பகுதிகளில் தோள்கொடுத்த,அர்ப்பணித்த சஹாபாக்களுக்கு எப்படி முன்னுரிமை,அந்தஸ்த்தோ அந்த வழிமுறைகளை கட்சியின் நகர்வுகளில் முன்னுதாரணங்களாகக் கொண்டு கல்குடாத் தொகுதி ஓட்டமாவடி,வாழைச்சேனை தலைமை ஊர்களை கவனத்தில் கொண்டும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய முஸ்லிம் வாக்காளர்களையும்,அதிகூடிய கீழ்வரும் சவால்களையும் சந்திக்கும் சமூகம் என்ற வகையிலும்

சவால்கள்

1.ஓட்டமாவடி பிரதேச செயலகம் அதனோடு இணைந்திருந்த 80 வீதமான முஸ்லிம்களின் விவசாயம்,கால்நடைவளர்ப்பு இன்னோரன்ன முக்கிய வளம் கொழிக்கும்,பொன்விளையும் 5 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளான கள்ளிச்சை,வடமுனை,ஊத்துச்சேனை,புணாணை மேற்கு,வாகனேரி ஆகிய சுமார் 26 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 2002 ஆம் ஆண்டு புலிகளின் ஆசிர்வாதத்தோடு புதிதாக தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு - கிரான் என்ற பிரதேச செயலகத்தோடு முஸ்லிம்களின் அங்கீகாரமின்றி இணைத்துள்ளதை மீட்டெடுக்க,நீர்ப்பாசனங்களை கொண்டுவர,உருவாக்க,அழிக்கப்பட்ட காணி ஆவணங்களை பெற்றுக் கொடுக்க,உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ள கல்குடாவுக்கு காங்கிரஸ் தேசியப் பட்டியல் எம்.பி உம் அமைச்சுக்களின் அதிகாரங்களும் வழங்கும்.

2.வாகரை பிரதேச செயலகத்திலிருந்து விரட்டப்பட்ட மதுரங்கேணிக்குளம்,குஞ்சங்கல்குளம் போன்ற கிராம மக்களையும் அதனுடன் தொடர்புபட்ட இன்னோரன்ன கிராமங்களில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அல்லது மாற்று இடங்களை பெற்றுக்கொள்வதற்கு

வாகரை பிரதேச செயலக எல்லைக்குள் வருகின்ற ரெதிதன்ன,ஜயந்தியாய தொடக்கம்,புணாணை கிழக்கு,காரமுனை ஆகிய முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழும்,வாழ்ந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகளை கோறளைப்பற்று மத்தி-வாழைச்சேனை என்ற பிரதேச செயலகத்துடன் இணைத்து பிரதேச சபையை உருவாக்குவதற்கு கல்குடாவுக்கு காங்கிரஸ் தேசியப் பட்டியல் எம்.பி உம்,அமைச்சுக்களின் அதிகாரங்களும் இன்ஸா அல்லாஹ் விரைவில் வழங்கும்.

இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிமட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரையுள்ள உண்மையான பார்வைகள்...

சத்தியம் வந்தது,அசத்தியம் அழிந்தது,நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.
அல்-குர்ஆன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -