அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி போது ரவி கருணாநாயக்கவின் நிதியமைச்சர் பதவி, அர்ஜுன ரணதுங்கவின் துறைமுகங்கள் அமைச்சர் பதவி, துமிந்த திஸாநாயக்கவின் விவசாய அமைச்சர் பதவி, விஜயதாஸ ராஜபக்சவின் நிதி அமைச்சர் பதவி மற்றும் கயந்த கருணாதிலக்கவின் ஊடக அமைச்சர் பதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சு பதவியில் இருந்து நீக்கினால் அந்த பதவி கபீர் ஹாஷீம் அல்லது ஹர்ஷ டி சில்வாவுக்கு கிடைக்கப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சர் பதவியை வழங்குவதாக இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளதாக தெரிய வருகிறது.
அதற்கமைய இறுதியாக இடம்பெற்ற மறுசீரமைப்பிற்கு முன்னர் நிதி அமைச்சின் கீழ் உள்ள பல அரசாங்க நிறுவனங்களை கபீர் ஹஷீமின் அரச நிறுவன அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.