கடந்த ஜனாதிபதித் தேர்தல் அன்று : மஹிந்த என்னிடம் தொலைபேசியில் பேசினார் - தேசப்பிரிய

டந்த ஜனாதிபதித் தேர்தல் அன்று மஹிந்த ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளருடன் தொலைபேசி அழைப்பினூடாக உரையாடியுள்ளமை குறித்து சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தகவலினை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தினத்தன்று மஹிந்த ராஜபக்ச தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தான் தோல்வியடைந்து வருகிறேன் தானே என தன்னிடம் கேட்டதாகவும் ,அதற்கு காலை 6 மணிவரை எதுவும் சொல்ல முடியாது, எனினும் தற்போதைய முடிவுகள் உங்களுக்கு பாதகமாகவே உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் தினத்தன்று மாத்திரம் அல்லாமல் அதற்கு முதலிலும் முன்னாள் ஜனாதிபதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடியிருப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிட்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணலிலே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதற்கு பிறகு மஹிந்தவை தாங்கள் சந்தித்ததுண்டா? என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆம் பல தடவைகள் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருமண நிகழ்வு, மரண வீடு, ஆண்டு நிறைவு விழா போன்றவற்றில் தான் மஹிந்தவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மிகவும் நீண்ட காலமாக எனக்கு அவரைத் தெரியும் என்பதோடு தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரும் நீண்டகாலமாக எனக்கு தனிப்பட்ட ரீதியாக தெரிந்தவர்களே என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், கடந்த தேர்தலில் மஹிந்த தோற்று மைத்திரி வெற்றி பெற்றாலும் முழு நாட்டையும் வென்றவர் தேர்தல்கள் ஆணையாளரான மஹிந்த தேசப்பிரிய என்பது எமது கருத்தென குறித்த சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் ஆம் என்னை “மேன் ஒப் த மெட்ச்“ என பலரும் சொல்கின்றனர். ஆனால் அனைவரும் சமமாக சேவை செய்யக் கூடிய விளையாட்டு மைதானத்தையே நான் அமைத்தேன். அத்துடன் இந்த தேர்தலினால் எனக்கு ஒரு நன்மை கிடைத்துள்ளது.

யாதெனில் இவ்வளவு காலமும் என்னைத் திட்டிக் கொண்டிருந்த பொதுமக்கள் இந்த தேர்தலுக்குப் பின் என்னை புகழத் தொடங்கிவிட்டார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எந்தவொரு தேர்தலின் போதும் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் எம்மால் சிறந்த தேர்தலை நடாத்தியிருக்க முடியாது எனவே அனைத்து புகழும் அனைவரையும் சாரும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் நேர்காணல் அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -