முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உத்தயோகபூர்வ இல்லம் வழங்கப்பட உள்ளது. ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் உத்தயோகபூர்வ இல்லமே இவ்வாறு வழங்கப்பட உள்ளது.
மஹிந்தவிற்கான உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த இல்லம் அடுத்த வாரமளவில் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இலங்கைக் கடற்படையினரால் இல்லத்தின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
20 கடற்படை வீரர்கள் இந்த புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட ரீதியாக தமக்கு வழங்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கம் வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.