முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த, இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று முதல் பாதுகாப்புக்கு இருந்த இராணுவ வீரர்களுக்கு பதிலாக பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சொன்னவை:-
எனது பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டு நான் தனி மனிதனாக இருந்தாலும் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது வரை காலமும் எனது பாதுகாப்புக்காக சேவையாற்றிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதோடு உங்கள் சேவையை நான் கௌரவப்படுத்துகின்றேன். என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.