மின்னல் தாக்கத்தால் இருவர் வைத்தியசாலையில் அனுமதி...!

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் 31.05.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது குறித்த தோட்ட பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அப்பகுதியில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த இரு ஆண்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -