அட்டாளைச்சேனை பிரதான வீதி வடிகான்களும் : பாதிக்கப்படும் பொது மக்களும்


பார்சான்-

ட்டாளைச்சேனை 10ம் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி அறபா வித்தியாலய பிரதான சந்தியில் இருந்து கானடி வரைக்குமான சுமார் 600 மீட்டர் தூரத்தில் இன்னும் வடிகான் அமைக்கப்படாமலும் நீர் வழிந்தோடுவதந்கு வழிகள் இல்லாமல் இருப்பதும் பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

மிக நீண்ட காலமாக, மழை பெய்தால் நீர் நிரம்பி அதனை அன்டியுள்ள மக்களும் அவர்களின் வீடுகளும் நீரில் மூழ்குவது வழமையானதே. பின்னர் பிரதேச சபையினரும் சில அரசியல் வாதிகளும் JCP கொண்டு தோண்டுவதுமாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

இருந்த போதிலும் சுமார் 3 வருடங்களுக்கு முன் சீராக சென்று கொண்டிருந்த நீர் தற்போது தடைபெற்று காணப்படுகின்றது. இதனால் அதனை அன்டியுள்ள அறபா வீதி, 1ம் குருக்கு வீதி, கின்னயடி வீதிகள் மற்றும் வீடுகள் நீரினால் மூழ்கி காணப்படுகின்றது. 

ஏன் இங்கு வாழும் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களா? அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்டவர்களில்லையா? அட்டாளைச்சேனையின் அனைத்து வீதிகளினாலும் வரும் முழு நீரினையும் தாங்கி கொள்ளும் இம்மக்களும் உங்கள் சகோதரர்கள்தான். 

தயவு செய்து இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 10ம் பிரிவு பொதுமக்கள் வேண்டி கொள்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -