யு.கே.காலித்தீன் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்,யு.எம்.இஸ்ஹாக்-
கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சுவட்டு மைதான விளையாட்டுப் போட்டி இன்று (31) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கணக்காளர், கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் , உடற்கல்வித்துறை உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார், உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவுர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் கோட்டம், கல்முனை தமிழ்க் கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த 800 இற்கும் மாணவ மாணவிகள் இப் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.