அரசியல் யாப்பு திருத்த சபைக்கு உலமா கட்சியினால் மட்டுமே பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளது..!

எம்.வை.அமீர் -
ரசியல் யாப்பு திருத்த சபைக்கு முஸ்லிம் கட்சி என்ற வகையில் முஸ்லிம் உலமா கட்சியினால் மட்டுமே பிரேரணைகள் இதுவரை முன் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார். அவரின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு அவர் தெரிவித்ததுடன் தம்மால் முன் வைக்கப்பட்ட பிரேரணைகளையும் விளக்கினார். அதில் உலமா கட்சியால் முன்வைக்கப்பட்ட யாப்பு திருத்த ஆலோசனைகள் வருமாறு:

1. ஜனாதிபதி முறைமை:

I. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையே உலமா கட்சி ஆதரிக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தனது செயல்கள் பற்றி பாராளுமன்றத்துக்கு பதில் கொடுத்தல், நீதி மன்றத்தின் கேள்விக்குட்படுத்தல் என்பன உள்வாங்கப்பட வேண்டும். 

ஜனாதிபதியினால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்துக்கெதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்து அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனாதிபதியின் தீர்மானம் செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். 

அதே போல் ஜனாதிபதியின் ஏதாவாதொரு தீர்மானம் இன நல்லறவுக்கு குந்தகமாக அமையும் பட்சத்தில் அதற்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு ஜனாதிபதி கட்டுப்பட வேண்டும்.

II. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும்.

III. ஒரு ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

IV. உப ஜனாதிபதிகளாக இருவர் இருப்பர். ஒருவர் முஸ்லிம் மற்றவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை சேர்ந்தோராக இருக்க வேண்டும். இவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

2. தேர்தல் சீர்திருத்தம்

1. உள்ளுராட்சி தேர்தல் முறை என்பது வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை கொண்டதாக அதாவது 50 க்கு 50 என்றிருக்க வேண்டும். அத்துடன் புதிய தொகுதிகள் வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களின் நலனை கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமாக மேலதிக வட்டாரங்கள் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் உருவாக்கப்பட வேண்டும். ஐந்து வீதத்துக்கும் கீழ் சிறுபான்மை மக்கள் வாழும் கிராமங்களின் சிறு பான்மை மக்களை ஒன்றிணைத்து இவ்வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

2. புதிய தொகுதிகள் பல உருவாக்கப்பட வேண்டும். அவற்றில் அக்கரைப்பற்று,காத்தான்குடி,கிண்ணியா, ஆகிய தொகுதிகளாக்கப்பட வேண்டும்.

3. பாராளுமன்ற தேர்தல் என்பது விகிதாசார முறைப்படியே இருக்க வேண்டும். அனைத்து தொகுதிகளுக்கும் உறுப்பினர் தேவை என்பதை கருத்திற் கொண்டு இரண்டு தொகுதிகளை ஒரு தேர்தல் மாவட்டமாக கருதி அதற்கேற்றாற் போல் பாராளுமன்ற அங்கத்துவம் பகிரப்பட வேண்டும் அத்துடன் தேர்தல் மூலம் 200 பேரும் தேசிய பட்டியல் மூலம் 30பேரும் நியமனம் பெறுவர். 

அத்துடன் சமயத்தலைவர்கள் 10 பேர் ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் முறையே பௌத்த துறவி ஐவர், இந்து குருக்கள் மூவர், மௌலவிமார் இருவர்ää கிறிஸ்தவர் பாதிரி ஒருவர். நியமிக்கப்படும் சமயத்தலைவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் பதிவு செய்யப்பட்ட ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அரசியல் கட்சியை சாராத ஒருவரால் அரசியல் ரீதியில் பேச முடியாது போகும்.

ஆக பாராளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 240.

4. இனப்பிரச்சனைக்கான தீர்வு:

1. வடக்கும் கிழக்கும் எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படக் கூடாது.

2. எம்மை பொறுத்த வரை மாகாண சபைகள் தேவையற்றவை என்பதால் அவை கலைக்கப்பட்டு மூன்று தேர்தல் தொகுதிகளுக்கு ஒரு சபை என்ற வகையில் மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டு அவை மாகாண சபை சட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கான சேவைகள் செயலுறுப்பெறும். இந்த சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கொரு முறை விகிதாசார முறையில் நடத்தப்படும்.

3. அப்படித்தான் மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றால் பிரிந்த வடக்கு கிழக்கின் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் கிழக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை வடக்குடன் இணைக்க முடியும். அதே போல் அம்பாரை மாவட்ட சிங்கள மக்களின் பிரதிநிதிகள் விரும்பினால் அம்மக்கள் ஊவா மற்றும் மத்திய மாகாணத்துடன் இணைந்து கொள்ள முடியும். 

அதே போல வட மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் விரும்பினால் வட மாகாண முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து தனி பிராந்திய சபை ஒன்றை வழங்க வேண்டும். இவை சாத்தியப்படாது என கருதினால் கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும்.

4. வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டு தனி அலகொன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என்ற கபடத்தனமான திட்டத்தை முற்றாக நாம் மறுக்கின்றோம். இது கிழக்கு முஸ்லிம்களை இன்னொரு இனத்துக்கு அடிமையாக்க முயல்வதாகும்.

5. கல்முனை கரையோர மாவட்டம் என்ற சொல்லை நாம் மறுப்பதுடன் கல்முனை தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். இதற்குள் கல்முனைää சம்மாந்துறைää புதிதாக உருவாக்கப்படும் அக்கரைப்பற்று என்பன உள்ளடக்கப்பட வேண்டும்.

6. வட மாகாண முஸ்லிம்கள் அனைத்து நஷ்டஈடும் வழங்கப்பட்டு மீள் குடியேற்றப்பட வேண்டும். அவர்கள் வெளியேற்றப்படு முன் அவர்களுக்கென இருந்த சகல நிலங்களும் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும்.

7. இலங்கை பல்தேசிய இனங்களினதும், மதங்களினதும் தாயக பூமியாகும். ஆகவே சகல மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். எந்தவொரு மதத்துக்கும் இனத்துக்கும் எதிராக மனிதாபிமானமற்ற முறையில் எவராவது அவமரியாதை செய்தால் அவருக்கெதிராக சம்பந்தப்பட்ட மதத்தின் அமைச்சு வழக்குத்தொடர வேண்டும்.

8. மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் இணக்க சபை உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொரு மதங்களிலிருந்தும் 40 வயதுக்கு மேற்பட்ட சமயத்தலைவர்கள் ஐவர் வீதம் இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுவாக அரசியல் நலன்களுக்காகவே இனவாதம்ää மதவாதம் பேசப்படுவதால் கட்சி சார் சமயத்தலைவர்கள் கொண்ட இணக்க சபை மூலமே அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்.

5. வேட்பாளருக்கான தகுதி:

I. அனைத்து தேர்தலிகளினதும் வேட்பாளர்களும் ஆக குறைந்தது ஏதாவது கல்வித்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

II. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுபவர் செலுத்தும் பணம் கட்சியாயின் ஆயிரம் ரூபாவும் சுயேற்சையாயின் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்படக்கூடாது. இதனை அதிகரிப்பது ஜனநாயக தேர்தலில் போட்டியிடும் ஏழை மக்களின்; ஜனநாயக உரிமை மீறலாக நாம் காண்கிறோம்.

III.வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட அளவு இளைஞர்கள், பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது நீக்கப்பட வேண்டு;ம். சில சபைகளில் இளைஞர்களை விட முதியவர்கள் சிறந்த சேவைகளை செய்வதையும்ää, இளைஞர்களே பெரும்பாலும் துஷ்பிரயோகத்தில் ஈடு படுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்தில் காண்கிறோம். ஆகவே வேட்பாளர் பட்டியல் என்பது முழுக்க முழுக்க இளைஞர்களையும் கொண்டிருக்கலாம் முதியவர்களையும் கொண்டிருக்கலாம். இதில் வரையறை தவிர்க்கப்பட வேண்டும்.

IV. வெளிநாட்டில் வாழ்வோhருக்கான வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது வாக்குகளை தேர்தல் திணைக்களத்துக்கு ஒன்லைன் மூலமாக அவர்களின் சொந்த ஈ மெயில் மூலமாக அளிக்கும் வiகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -