புதிய அரசியலமைப்பிற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் 5000 கருத்துக்கள் மற்றும் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
20 தலைப்புக்களின் கீழ் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்காக 2200 வாய்மூல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், தனிநபர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் ரீதியில் இவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், 2300 யோசனைகள் எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் www.Yourconstution.lk என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.