பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

நான் இராஜாங்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. 

அதேவேளை, மட்டக்களப்பு கெம்பஸ் விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக வேண்டி மலேசியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளேன்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர்களது பதவிகள் - அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று சகல இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். 

இந்தக் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களது அதிகாரங்கள் தொடர்பில் ஒருவார காலத்துக்குள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளனர். 

இது தவிர வேறு எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.  என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -