கோடீஸ்வரரான ஜேக் கோல்ட் ஸ்மித்தை எதிர்த்து சாதிக் கான் மேயர் தேர்தலுக்கு நின்றார். ஜேக் கோல்ட் ஸ்மித் மிகக் கீழ்தரமான பிரசாரத்தை மேற்கொண்டார். சாதிக் கானுக்கு ஓட்டளித்தால் லண்டனில் குண்டு வெடிக்கும் என்றெல்லாம் சொல்லி வெறுப்பு பிரசாரத்தை கையிலெடுத்தார்.
ஆனால் லண்டன் மக்கள் ஜேக் கோல்ட் ஸ்மித்தின் வெறுப்புப் பிரசாரத்தை புறந்தள்ளி சாதிக் கானை வெற்றி பெற வைத்துள்ளனர்.
லண்டனின் புதிய இஸ்லாமிய மேயரை நாமும் வாழ்த்துவோம்.
பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிய குடும்பத்தில், 1970ஆம் ஆண்டு பிறந்தவர் சாதிக் கான்.
கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சாதிக் கான் அமைச்சர் பதவி வகித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.