முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர், யோஷித ராஜபக்ஷ, காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக இடம்பெறும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்று கொடுப்பதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் பொருளாதார அமைச்சர், பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெஹிவளை – கல்கிசை நகர மேயர், தனசிறி அமரதுங்கவும் வாக்குமூலம் பெற்று கொடுப்பதற்காக காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.