ஜே.எப்.காமிலா பேகம்-
மட்டு மாவட்டத்தின் கிரான்,பெரிய மாதவளை, வவுணதீவு, நாவலடி, வாகனேரி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் ,தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி, பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும், வரட்சி நீடிப்பதால் நீர்பற்றாகுறையினால் கஷ்டப்படுவதாகவும் (9) அன்று தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக மட்டு. கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில்,
இதில் குறிப்பிட்ட சில கிராமங்களில் அண்மைய காலமாக அத்து மீறிய குடியேற்றங்கள் பல காணப்படுவதாகவும்,காடுகள் பல அழிவுக்குற் படுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளுக்கு கால் நடைகள் மேய்ச்சலுக்கு சென்றால் ,சில நேரங்களில் காணாமல் போவதாகவும், சில நேரங்களில் அப்பகுதி வாழ் மக்களால் வெட்டப்படுவதாகவும்” தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “வறட்சி நீடிக்குமேயானால், கால்நடைகள் அழிவுறவும் சந்தர்ப்பம் உள்ளதாக “ கூறினார்.
இப்பிரச்சனை தொடர்பாக, மட்டு அரச அதிபர் திருமதி பி.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறுகையில்
“எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி இப்பிரச்சனை சம்பந்தமாக கூட்டத்தில் ஆராய உள்ளதாக “ தெரிவித்தார்.
கிழக்கு கால்நடைவிவசாய அபிவிருத்தி அமைச்சர் துறை ராஜசிங்கம் அவர்கள் விபரிக்கையில்
“சுமார் ஐம்பது ஏக்கர் வரை, மேய்ச்சல்தரையாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பினும் பலமுறை முயன்றும் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவில்லை. தற்போதும் சம்பந்தபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடாத்திக்கொண்டு இருக்கிறோம் .
இது மகாவலிக்கு உரிய பிரதேசங்களா,வணபரிபாலனத்துக்கு உரியதா, அதிலும் மட்டகளப்பு மாவட்டத்துக்கா அல்லது அம்பாறைக்கா உரியதா என்பதை தீர்மானிப்பதில் பலசிக்கல்கள்.
இங்கே குடியிருக்கும் மக்கள் 1962ஆம் முதல் இப்பிரதேசங்களில் வாழ்ந்ததாகவும் கூறுகின்றனர். இவர்கள் முறையான அரச பதிவுகள் இல்லது வாழ்வதாகவே நான் நினைக்கிறேன்
இப்பிச்சனைக்கான வேரை கண்டுபிடித்து விரைவில் விமோசனத்தை பெற்றுகொடுக்க விரும்புகிறேன். இம்மாதம் 19ம் திகதி மட்டு அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டத்திற்கு மகாவலி அதிகாரி உட்பட சம்மந்தப்பட்ட பல அதிகாரிகள் கலந்து ஆலோசிக்க இருப்பதால், சரியான முடிவுகள் எட்டப்படலாம்” என்று கூறினார்
நாட்டின் 9% எருமை மாடு வளர்ப்பு மட்டுமாவட்டதிலேயே .உள்ளது இம்மாவட்டத்தில் மாட்டுவளர்ப்பு பண்ணைகள் 8873 ஆட்டு வளர்ப்பு பண்ணைகள் 4455 இருப்பதாக 2015 இல் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பண்ணையாளர்கள் வருமானத்தில் பாரியதா க்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் கொள்வனவாளர்களுக்கு இறைச்சி, பாலுணவு உற்பத்திகளில் விலை அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தயுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.