நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து கண்டனம்!


.தே.கட்சி காத்தான்குடி கொத்தணிப் பிரிகாத்தான்குடி கொத்தணிக் பிரிவின் முக்கியஸ்தர்களுக்கான விஷேட அவசரக் கூட்டம் இன்று (13.05.2016) வெள்ளிக்கிழமை மாலை கொத்தணி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அண்மைக்காலமாக ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணியுடன் இணைந்து செயற்பட்டு வரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, முக்கியமான பின்வரும் விடயங்களில் தொடர்பில் கொத்தணி கிளையின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தி தமது வன்மையான கண்டனத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குத் தெரிவித்தனர்.

1. கடந்த 02ம் திகதி கர்பலா பாலமுனை வீதியைப் பார்வையிடுவதற்காக முன்னேற்பாடுகள் எதுவுமின்றி தந்திரமான முறையில் அமைப்பாளர் முஸ்தபாவை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் பாலமுனைக்கு வரவழைத்தது.

2. அது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அமைப்பாளரின் அசிங்கமான புகைப்படம் ஒன்றை இணைத்துப் பிரசுரித்தது.

3. அதையடுத்து பாலமுனையில் பின்தங்கிய பிரதேசமான ஊஐபு வீட்டுத்திட்டப் பகுதிக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் ஐ.தே.க. கொத்தணி அமைப்பாளர் முஸ்தபாவையும் வலிந்து உடன் அழைத்துச் சென்று பார்வையிட்டிருந்த போதிலும், அது தொடர்பாக ந.தே. முன்னணியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அமைப்பாளர் முஸ்தபாவின் பெயரையோ, அவரது படத்தையோ இடம்பெறச் செய்யாமல் முற்று முழுதாகத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தது.

இதையடுத்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது தொடர்பில் பின்வரும் தீர்மானங்களும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன:

1. ஐ.தே.கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையில் அரசியல், சமூக வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படுவதாக எந்தவொரு ஒப்பந்தமும் இதுவரையில் உத்தியோகபூர்வமாகச் செய்து கொள்ளப்படவில்லையாதலால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிப் பிரிவு நிர்வாகிகள் அரசியல், சமூக வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படுவதாயின் அது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் முறையான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு கட்சித் தலைமையின் அங்கீகாரத்தைப் பெற்றே செயற்பட வேண்டும்.

2. பிரதேசத்தில் இடம்பெறும் சமூக, அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணிக் கிளையின் அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா உட்பட மத்திய குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலையும், ஒத்துழைப்பையும் விரும்பும் எந்தவொரு அரசியற்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்களினினது அழைப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை குறித்தும் கொத்தணியின் மத்திய குழுவிற்குத் தெரியப்படுத்தி, அதில் ஆராயப்பட்டு மத்திய குழுவின் அங்கீகாரம் பெற்ற பின்னரே குறித்த நிகழ்வுக்கான பங்குபற்றலையும், ஒத்துழைப்பையும் வழங்குவது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -