இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஷிப்லி பாறூக்கின் சமூக சேவைகள்





ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

வுணதீவு மக்களின் குடி நீர் பிரச்சனைக்கு பொறியியலாளர் ஷிப்லி பாரூகின் மூலம் உடனடி தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின், வவுணதீவு பிரதேசத்தின் கன்னங்குடா, குருந்தியடி, காஞ்சிரங்குடா மற்றும் கொத்தியாபுலை ஆகிய பிரதேசங்களில் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் நிலைகளிலுள்ள நீர் வற்றியதனால் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இப்பிரச்சனை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே பல்வேறு ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் எந்தவொரு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கவனமெடுக்காத நிலையில் கடந்த 07.05.2016ஆந்திகதி (சனிக்கிழமை) குறித்த பிரதேசங்களுக்குஒரியியலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக் நேரில் சென்று மக்களினுடைய அவலநிலையை கண்டறிந்தார்.

மேலும் கடந்த 09.05.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கமைவாக மனிதாபிமான உள்ளம் கொண்ட அரச சார்பற்ற தனி நபர்கள் மற்றும் சமூக சேவை உள்ளமுடைய உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டியதை அடுத்து நீர் வளமுள்ள இடங்கள் இரண்டு அடையாளங்காணப்பட்டு கிணறுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு . அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (நேற்று) 12.05.2016 ஆந்திகதி வியாழக்கிழமை இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரின் உத்தரவிற்கமைவாக வவுணதீவு பிரதேச சபையூடாக அடையாளங்காணப்பட்ட பல இடங்களில் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் தாங்கிகளை வைத்து நீர் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதற்கமைய 11.05.2016ஆந்திகதி (புதன்கிழமை) முதற்கட்டமாக பத்து இடங்களில் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு மக்களுக்கு நீர் வழங்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கும் மேலாக தாம் எதிர்நோக்கிய இந்த நீர் பிரச்னைக்காண தீர்வினை பெற்றுக்கொடுக்க யாரும் முன்வராத நிலையில் நீர் வழங்கும் திட்டத்திற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு நீரைப் பெற்றுக்கொடுத்தமைக்கு மக்கள் தங்களது நன்றிகளை பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கு தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -