மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று அதிகாலையில் உயிரிழந்தார்...!

தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நுகேகொடையில் இருக்கும் அவரது வீட்டின் கூரையில் இருந்த மரத்தடி ஒன்று உடைந்து அவரது தலையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது தலைப்பகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவரது தலையில் மரத்தடி விழுந்து காயம் ஏற்பட்டதைப் போலன்றி கனமான தடியொன்றில் பலமாகத் தாக்கியதன் காரணமாகவே காயம் ஏற்பட்டிருப்பதைப் போன்று காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த ராணுவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் சுமித் மானவடு ஆவார்.

மேஜர் ஜெனரல் மானவடு போர் இடம்பெற்ற காலத்தில் எறிகணைப் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -