தற்போது எல்லா இணையம்களிலும் ,மற்றும் பத்திரிகைகளிலும் பேசப் படும் பொருளாக இருப்பது முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒற்றுமை படுத்துவோம் என்பதே. தற்போது உங்களால் நாள் தோறும் குற்றம் சுமத்தப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒற்றுமை படுத்துவோம் என்ற கோஷத்தை தூக்கி வீசி விட்டு எதிர் கால அரசியலுக்கு நல்ல திறமை வாய்ந்த தகுதியானவர்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்ற முயற்சியில் யாவரும் ஈடு பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஈடுபடும் போது தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு கிலி பிடிக்க வாய்ப்புண்டு இல்லையேல் ஒற்றுமைக் கோசத்தை தொடர்வீர்களானால் அவர்களின் மவுசு பலம் பெறும் ,அது மட்டுமல்ல பல பல நிபந்தனைகள உங்கள் மீது விதிப்பார்கள் .இது எமக்கு தேவையா ?
எத்தனையோ பேர் தற்போதுள்ள அரசியல்வாதிகளை விட முஸ்லிம் சமூகத்தில் தகுதியுள்ளோர் இலைமறை காய்களாக மனம் புழுங்கிக் கொண்டு உள்ளனர் ,ஏன் அவர்கள் அரசியலுக்கு முன்வருவதில்லை ? என்பதை நீங்கள் அறிவீர்களா ?ஆம் பணம், இந்த முஸ்லிம் சமூகம் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பணமுல்லோரை மோப்பம் பிடித்து அவர்களை தேர்வு செய்வதே பிறகு புலம்புவதே இது காலம் காலமாக நடை பெறும் செயல் , இதற்க்கு மூல காரணம் சில முஸ்லிம்கள் மத்தியில் பிரபலம் பெற்ற அரசியல் கட்சிகள் பணம் படைத்தோரை மட்டும் தங்கள் கட்சியில் தேர்தலில் களம் இறக்குவதே கடந்த காலம்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்
இப்போது உங்களுக்கு விளங்க வேண்டும் உங்களுக்கு தேவை பணமுள்ளவனா அல்லது திறமை உள்ளவனா என்று .
தேசியமாம் ,ஒற்றுமையாம் ,இவைகள் என்ன கடைத் தெருவிலா விற்குது?
தற்போதுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் அரசியல் செய்தி நிருபர்கள் நல்ல உணர்ச்சி பூர்வமான கவிதைகளை எழுதுங்கள்,அல்லது கட்டுரைகளை எழுதி மக்களை விழிப்பு அடையச் செய்யுங்கள் .
எதிர் கால அரசியலுக்கு தகுதியானவர்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்ற முயற்சியில் யாவரும் ஈடு பட வேண்டும் இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அறிவுரை ஒன்றை முஸ்லிம் சமுகத்துக்கு முன்வைத்தார்