சவுதி தனியார் துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ரமழான் காலங்களில் வெயிலில் வேலை செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ரமழான் மாதம் 10 ம் பிறை முதல் அமுலுக்கு வரும் வகையில், நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை தொழிலார்களை வெயிலில் பணிக்கமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் துல் ஹஜ் மாதம் 14 ம் பிறை (செப்டம்பர் 15) வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஒவ்வொரு வருடம் அமுல் படுத்தப்படும் அதேவேளை, இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்தால், அது தொடர்பில் பின்வரும் இணையதளம், அல்லது இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு புகார் செய்யலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
(19911) அல்லது https://rasd.ma3an.gov.sa