கல்முனையில் மூன்று மாதங்கள் கடந்தும் எரியாமல் இருக்கும் வீதி மின் விளக்குகள்...



அப்துல் அஸீஸ்-
ல்முனை தெற்கு பிரதேசத்தின் கல்முனைக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் சுமார் மூன்று மாதம்களாக எரியாமல் இருப்பது தொடர்பாக அப்பிரதேச மக்களும், வியபாரநிலைய உரிமையாளர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இவ் நவீன தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சுமார் ஒரு வருட காலமே சென்ற நிலையில் இலங்கை மின்சார சபை கல்முனை அலுவலகத்தினால் இத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டு மின்மாணிப்பெட்டி சீல் இடப்பட்டுள்ளமை தங்களுக்கு வேதனையளிப்பதாக அப்பிரதேச மக்களும், வியபாரநிலைய உரிமையாளர்களும் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கல்முனை அலுவலக அதிகாரிகளை கேட்டபோது,
கல்முனை தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் பாவனைக்கான கொடுப்பணவுகளை கல்முனை மாநகர சபையே செலுத்த வேண்டும். அதனை இதுவரை செலுத்தாமையினாலே நாங்கள் இவ் மின் துண்டிப்புபை மேட்கொண்டோம் என்றனர்.

இதனை அடுத்து இவ்விடயத்துக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியான கல்முனை மாநகர ஆணையாளார் ஜே.லியாக்கத்தலியிடம் இது தொடர்பாக கேட்டபோது,
கல்முனை தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் பாவனைக்கா லெட்சக்கணக்கான ரூபாக்களை இலங்கை மின்சார சபைக்கு கல்முனை மாநகர சபை செலுத்தவேண்டியுள்ளது. அதனை செலுத்தி தெரு மின் இணைப்பை வழங்க நாங்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம் எனக்கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -