கிருலப்பனையில் இடம்பெற்ற மே தின கூட்டத்திற்காக மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவணியினர் வந்த பஸ்வண்டி சில்லில் அகப்பட்டு பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பலியாகிய செய்தியை பிரசுரித்து இருந்தோம்.
அஹ்மட் ஸஹ்ரி என்ற மாணவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மாத்தறை, கந்தற பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரான "அஹ்மட் ஸஹ்ரி" என்பவர் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
மே தின கூட்டத்திற்கு சென்று விட்டு வேகமாக வந்த பஸ் ஒன்றே மேற்படி இளைஞர் மீது மோதியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்!
குறித்த பஸ்ஸை செலுத்தி வந்த சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும், பஸ் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
இறையடி சேர்ந்த இவரின் நல்லமல்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு மேலான சுவனம் கிடைக்க உங்களோடு நாமும் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி-அல்மஷூறா.