ஹக்கீம் + ஹசன் அலி சந்திப்பு : முக்­கிய தீர்மானங்கள் எட்டப்படவுள்ளது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்­சியின் செயலாளர் நாயகம் ஹஸ­னலி ஆகி­யோர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த சந்­திப்­பின்­போது முக்­கிய தீர்மானங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

2015 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் நடை­பெற்ற கட்­சியின் கட்­டாய உச்­ச­பீடக் கூட்டம் மற்றும் அதனையடுத்து இடம்­பெற்ற பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து தலைவர் மற்றும் செயலாலருக்கிடையில் இழு­பறி நிலை ஆரம்பமானது. செய­லாளர் நாய­கத்தின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­ட­மையே இருவருக்குமிடையிலான முரண்பாட்டுக்கு பிர­தான கார­ண­மெனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை கட்­சியின் மஜ்­லிஷுஷ் சூறா தலைவர் ஏ.எல்.எம். கலீல் மௌலவி மற்றும் உலமா காங்­கிரஸ் பிரதிநிதி எச்.எம்.எம். இல்யாஸ் மௌலவி ஆகிய இரு­வரும் கட்சித் தலை­மைக்கு எதிராக சதி முயற்­சியில் ஈடுபட்டதாக குறிப்­பிட்டு அவ்­வி­ரு­வ­ரையும் கட்­சியின் உயர் பீடத்திலிருந்து இடை­நி­றுத்­தி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அதனைத் தொடர்ந்து பால­மு­னையில் நடை­பெற்ற கட்­சியின் தேசிய மாநாட்டில் செய­லாளர் நாயகம் ஹஸ­னலி கலந்­து ­கொள்­ள­வில்லை. இந்த நிலைமையில் கட்­சியின் தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டையில் நீண்ட இடை­வெ­ளியின் பின்னர் நடைபெறவுள்ள சந்­திப்பு இதுவென்பது குறிப்­பி­டத்­தக்­கது. 
டெ.சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -