சப்னி-
மாதமொன்றும் ஆயிரம் ரூபா வீதம் கடந்த க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்த வரியா குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களை தெரிவு செய்து அவர்களின் கல்விச் செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கான முதற்கட்டமாக இரு வருடங்களுக்கான பணப்பரிசுகளை இன்று வழங்குவதில் மகிழ்வதுடன் மாணவர்களின் கல்வி செயற்பாடு இன்னும் எழிச்சி பெரும் என அமைச்சர் நசீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்த வரியா குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களை தெரிவு செய்து "வாழ்வின் எழுச்சி" சிப்தொற கல்வி புலமைப் பரிசில்களை வழங்கும் நிகழ்வு இன்று (31) அட்டாளைச்சேனை செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மாணவர்களின் கல்விச் செயற்பாடானது இன்றைய கால கட்டத்திற்கு மிக அத்தியவசியமானது. ஆனால் மாணவர்கள் தனது கல்விச் செயற்பாட்டினை தொடர்வதற்கு குறிப்பாக வறிய மாணவர்கள் தங்களது கல்விச் செயற்பாட்டினை தொடர்வதில் சிரமம் அடைகின்றனர். இதனை நாம் கருத்திற்கொண்டே இத்திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளோம்.
மேலும், இவ்வாறு மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் இலகுவாக காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அத்துடன் தொடர்ந்தும் இவ்வாரான ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தொரிவித்தார்
இந்நிகழ்வின் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதிதியோகத்தர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இவர்களுக்கான "வாழ்வின் எழுச்சி" சிப்தொற வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீர் கலந்து கொண்டு இவர்களுக்கான இரண்டு வருட கொடுப்பணவாக 16,௦௦௦ பெறுமதியான பணிப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.