மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்து செய்யப்பட்டது...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குருநாகல் நகரில் அமைந்துள்ள பௌத்தாலோக பிரிவெனவில் நடைபெறவிருந்த குறித்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யயப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏராளம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு குறித்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -