மயில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் அட்டாளைச்சேனை றியாஸ் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியில் இணைவு..!

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான கலாநிதி எம்.ஏ.சீ முகம்மது றியாஸ் கட்சியின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியின் சகல பதவிகள் மற்றும் செயற்பாடுகளிலுமிருந்தும் விலகிக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். 

ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை நேற்று முன்தினம் (3) கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்பே தனது ஆதரவாலர்கள் சகிதம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். 

இதன்போது வன்னிமாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானும் கலந்துகொண்டார். கடந்த பொதுத்தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தடம் பதிப்பதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் கலாநிதி றியாஸ் முன்னின்று செயற்பட்டவர். 

அதுமட்டுமில்லாது மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த றியாஸ் அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் நிந்தவூர் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அக்கட்சியின் மீது நம்பிக்கையிழந்து அதிருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். 

கலாநிதி றியாசின் வெளியேற்றம் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்ப்படுத்துமெனவும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியுற்ற அக்கட்சியின் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் சுபைதீனிடமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலிடமும் இம்போட்மிரர் தொடர்பு கொண்டு கேட்டபோது: 


குறிப்பிட்ட றியாஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல்ல என்பதுடன் இணைப்பாளர் பதவி கேட்டு அது வழங்கப்படாமையால் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால் மீண்டும் எங்களுடன் வந்து இணைந்து கொள்வார் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -