க.கிஷாந்தன்-
அட்சய திரிதியையான 09.05.2015 அன்று அட்டன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை ‘அட்சய திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சய திரிதியை அன்று சிறிய குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.
அட்சய திரிதியையான 09.05.2015 அன்று அட்டன் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தமை குறிப்பிடதக்கது.