அவரவருக்கேற்ப பிரயோசனமுள்ள வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் - சிப்லி பாறுக்

எம்.ரீ. ஹைதர் அலி,அஹமட் இர்ஷாட் - 
சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு தனக்கு ஏதேனும் வாழ்வாதார உதவி ஒன்றினை செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் ஒரு வயதான தாய் வேண்டுகோள் விடுத்தார். 

தனக்கு சிறியதொரு மரக்கறி வியாபாரம் ஒன்றினை மேற்கொள்வதற்கு உதவுமாறு கேட்ட அந்த தாய்க்காக தானே அத்தாயை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்ற பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்தும் மேலதிகமாக ஒரு தொகைப்பணமும் கொடுத்து சிறியதொரு வியாபார உதவியை வளங்கி வைத்தார். மற்றவர்களில் தங்கி வாழாமல் தங்களது முயற்சியினால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். 

வாழ்வாதார உதவிகள் செய்யும் விடயத்தில் வெறுமனே நாங்கள் பொருட்களை கொடுப்பது மாத்திரமல்லாமல் பிரயோசனமடைய வேண்டிய விதத்தில் வாழ்வாதார உதவிகள் அமைய வேண்டும். இதன்போது தன்னால் உதவி வழங்கப்பட்ட நபர் வியாபாரத்தில் ஈடுபட்டமையை கண்டு மிகவும் சந்தோசமடைந்த பொறியியலாளர் சிப்லி பாறுக் இவ்வாறு மற்றவர்களையும் ஊக்குவிப்பதோடு, 

அவர்களுக்கு எந்தெந்த சுயதொழில்கள் செய்யமுடியுமோ அதனை சிறியளவிலேனும் ஆரம்பித்து தங்களது தொழில்களை பெருக்கிக்கொள்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வியாபரிகளுடன் உரையாடும் போது தெரிவித்தார். 

இந்த விஜயத்தின்போது வியாபாரிகளின் நிலைமை அவர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்ததோடு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஆரையம்பதி பிரதேச சபை ஊழியர்களோடும் அளவளாவினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -