க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11.05.2016 அன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயல்படபோவதாக கோரி நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினருமாக இருந்த பி.ரவிச்சந்திரன், மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.சக்திவேல் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் லிந்துலை பிரதேச அமைப்பாளர் கே.ராமமூர்த்தி ஆகியோர் புதிதாக இணைந்து கொண்டனர்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ், ஏ.பிலிப்குமார், புதிதாக கட்சியில் இணைந்து கொண்ட முன்னால் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் என்.சதாசிவன், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.