இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர்..!

த.நவோஜ்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களுள் ஒருவரும், முண்னணி கபடி பயிற்றுவிப்பாளராகவும் திகழும் துரைச்சாமி மதன்சிங் அவர்கள் 3வது ஆசிய கபடி (ஊசைஉடந முயடிடியனi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான ஆசிய உசைஉடந கபடி சுற்றுப் போட்டியானது இம்மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை (ஆயல 2னெ வழ 9வாஇ 2016) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணியானது ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த வகையில் இவ்;வணியில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் வீரரும் எம்மண்ணை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விடையமாகும்.

ரி.மதன்சிங் அவர்கள் முதலாவது ஆசிய ஊசைஉடந கபடி போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்டதுடன், அப்போட்டித் தொடரில் இலங்கை அணி 3ம் இடத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர் மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மண்ணிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமை தேடித் தந்தவருமாவார்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டிற்காக அhப்பணித்துள்ள இவர் இப்போட்டிகளில் பிரகாசித்து அணிக்கும், நாட்டிற்கும், மண்ணிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -