சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தமது குடும்பத்தாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், அங்கு யோஷிதவின் காதலி பணியாற்றுவதால், அவருக்காகவே யோஷித அவ்வப்போது அங்கு சென்று தேவையான உதவிகளை பெற்றுக்கொடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது காதலி உதவி கோரும் பட்சத்தில், யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதே இயல்பென குறிப்பிட்ட நாமல், ராஜபக்ஷவின் குடும்பத்தார் பலருக்கு உதவி செய்துள்ளதாக இதன்போது குறிப்பிட்டார்.
அத்தோடு, சீ.எஸ்.என் நிறுவனத்தின் உரிமம் ராஜபக்ஷவினருக்கு சொந்தமானதல்லவென்றும், குறித்த நிறுவனத்தை யார் வேண்டுமானும் எதற்காகவும் பயன்படுத்தலாமெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.