அப்துல்சலாம் யாசீம்-
தகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDIT) கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமென திருகோணமலை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஜெ.பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் அநேகமான பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்பட்டும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் 2008ம் ஆண்டு இந்த கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. 2011ம் ஆண்டிலிருந்து டிப்ளோமாதாரிகள் கற்கை நெறியை பூர்த்தி செய்து வௌியேறியுள்ளதாகவும் உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஜெ.பிரதீபன் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் HNDIT கற்கை நெறி பயிற்சியை முடித்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் கூறினார்.