வூஸ்க், சிம்ஸ் கெம்பஸ் இணைந்து ICT துறையில் தொழில் வழங்குனருடனான சந்திப்பு..!

எம்.வை.அமீர்-
வூஸ்க் நிறுவனம், அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார நிலைமாற்றத்துக்கான விசேட திறன்களை அதிகரிக்கும் நோக்கில், இளைஞர் யுவதிகளை பயிற்றுவித்து துறைசார்ந்த நிறுவனங்களுக்கு வழங்குவதன் ஊடாக, குறித்த இலக்கை அடையும் நோக்கில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதன் ஒரு கட்டமாக சிம்ஸ் கெம்பஸுடன் இணைந்து, ICT துறையில் பணியாற்றும் நிறுவனங்களில் காணப்படும் ICTதொடர்பான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் அது தொடர்பான பயிற்சிகளை இளைஞர் யுவதிகளுக்கு வழங்கி, அவர்களின் ஊடாக நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதுடன் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்பட திட்டமிட்டுள்ளது.

உலகில் 20க்கு மேற்பட்ட நாடுகளில் பணியாற்றிவரும் வூஸ்க் எனப்படும் கனேடிய உலக பல்கலைக்கழகம், இலங்கையிலும் பலவருடங்களாக பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றது. விசேடமாக தொழிற்பயிற்சி விடயத்தில் மிகுந்த கரிசனை காட்டிவரும் இந்நிறுவனம் இலங்கையில் தற்போது 11 மாவட்டங்களில் பணியாற்றிவருகின்றது.

சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபாவின் முயற்சியின் பயனாய், சாய்ந்தமருது சீ பிறீஸ் வரவேற்பு மண்டபத்தில் கனேடிய உலக பல்கலைக்கழக நிறுவனம் 2016-05-11 ஆம் திகதி ICT துறையில் தொழில் வழங்குனருடனான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தில் ICTதுறையில் பணியாற்றும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு வூஸ்க் நிறுவனத்தின் சார்பில் அதன் தனியார்துறை முகாமையாளர் திமோதி எட்வட், சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் கவிதா அருணகிரிநாதன் மற்றும் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஜேசு சகாயம் ஆகியோர் கலந்து குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

ICT துறையில் பணியாற்றும் நிறுவனங்களை உள்ளடக்கி அம்பாறை மாவட்டத்தில் மன்றம் ஒன்றினை அமைத்து அதன் ஊடாக செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அதுவரை தற்காலிக செயற்பாட்டுக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -