ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கிழக்கு மாகாண சபையினால் அமுல் ப்படத்தப்படவுள்ள IRoad திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கும் 600 கிலோ மீட்டர் வீதிகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம், அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்போடு நேற்று அக்கரைப்பற்றுப் பிரதேச சபையில் இடம்பெற்றது.
இதில், அமைச்சர் அதாவுல்லாவின் வீடு அமைந்துள்ள வீதியான தெற்கு வீதியையும் உள்வாங்கி செய்வதற்கான உத்தரவை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேற்கொண்டு இன்று காலை மாநகர சபையினால் அவ்வீதி அளவிடப்பட்டு உள்வாங்கப்பட்டது.
அதன் பிரகாரம், அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட தெற்கு வீதி, உடையார் வீதி, அல்-பாத்திமியா வீதி, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதி, கே.வி.எஸ்.வீதி, ஒவிசர் வீதி, ஆயுர்வேத வைத்தியசாலை வீதி, பதூர் பாடசாலை வீதி, பழைய யூனியன் வீதி, எம்.எம்.எம்.வி ஐந்தாம் குறுக்குத் தெரு, எம்.எம்.எம்.வி ஆறாம் குறுக்குத் தெரு, மின் மாற்று வீதி, சேகு மொஹிதீன் பரிசாரி வீதி, சறூத் வீதி, மத்திய வீதி போன்றவையும்,
அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி மையவாடி கிழக்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி, ஆயிஷா வீதி, தப்லிக் வீதி, அஸ்மியா வீதி, பாடசாலை வீதி, ஏ.எல்.வீதி, ஜென்னா பள்ளி வீதி என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதனை திரிபுபடுத்தி சில சமூக வலைத்தளங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவை தொடர்புபடுத்தி செய்திகள் வந்திருப்பது நகைப்புக்குரிய விடயமாக உள்ளது.
அதிலும் ஜனாதிபதியையும் தொடர்படுத்தியிருப்பது வேடிக்கைக்குரிய விடயமாக இருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது கருத்துத் தெரிவித்தார்.
கேட்பவர் கேணயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டப் பரக்குமாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரம் இழந்த பின்னர் நாளைக்கு எம்.பி கிடைக்கும்; நாளை மறுதினம் அமைச்சர் கிடைக்குமென வாயால் அரசியல் செய்வோருக்கு இதெல்லாம் சாதாரணமெனவும் அவர் கிண்டலாகச் சொன்னார்.
குறிப்பிட்ட அறிக்கைக்கு... கிளிக் செய்யவும்...
குறிப்பிட்ட அறிக்கைக்கு... கிளிக் செய்யவும்...