நான்: இன,மத,பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டவன் – இம்ரான் MP

அஹமட் இர்ஷாட் -
ன மத பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டவான் நான் என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் குச்சவெளியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

நான் உங்கள் பிரதேசங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்வதை தவிர்த்து மூதூர் தொகுதியில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு என்னிடம் சிலர் கூறினர் ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் எமது சமூகத்தின் மனநிலையையே எடுத்துக்காட்டியது அடுத்த பாராளுமன்ற தேர்தல் பெரும்பாலும் தொகுதி முறையிலேயே நடைபெறும் இதனால் நீங்கள் மூதூர் தொகுதியிலயே அதிக கவனம் செலுத்த வேண்டும் அதைவிடுத்து திருகோணமலை சேருவில தொகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வது நமக்கு பயனளிக்காது என கூறினார்கள். 

இவர்களுக்கு மட்டுமல்ல இவ்வாறு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் அனைவரிடமும் நான் கூறும் பதில் நான் மூதூர் தொகுதிக்கு மட்டுமான பாராளுமன்ற உறுப்பினரல்ல முழு மாவட்டத்துக்குமான பாராளுமன்ற உறுப்பினர் மூதூர் தொகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் நான் வெற்றிபெறவில்லை மாவட்டம் முழுவதும் நான் வாக்குகேட்டு சென்றுள்ளேன் ஆகவே அவர்களின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது எனது கடமை அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு இயங்குபவன் நான் அல்ல.

அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு இயன்குபவனாக இருந்தால் கந்தளாயில் 40 வருடங்களாக சேதமடைந்துள்ள பாலத்தையும் உங்கள் பிரதேசத்தில் உள்ள காசிம்நகர் உள்வீதியையும் புனரமைக்க வேண்டிய தேவை கிடையாது வாரத்துக்கு ஒருமுறை உங்கள் பகுதிகளுக்கு விஜயம் செய்ய தேவையில்லை எனக்கும். 

எனது அரசியல் நடவடிக்கைகளை மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை போல மூதூர் தொகுதிக்கு மட்டும் மட்டுபடுத்த தெரியாமலில்லை ஆனால் ஒருபோதும் அவ்வாறானதொரு வியாபார அரசியலை நான் முன்னெடுக்கமாட்டேன். 

இன மத பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டவான் நான் இவ்வருட எனது ஒதுக்கீடுகளே இதற்கு சான்று 9கோவில்களுக்கும் 2 பௌத்த விகாரைகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளேன் முடியுமானால் பள்ளிவாயல்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள தமிழ்,சிங்கள அரசியல்வாதிகளை அடையாளம் காட்டுங்கள்.

தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவாக்க வேண்டும் என்ற கோஷம் ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.

நாட்டில் புதிதாக அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றினைந்த்து செயற்படுவது காலத்தின் தேவை ஆனால் இக்கூட்டமைப்பின் நோக்கம் எமது உரிமைகளை வென்றடுப்பதாகவே இருக்கவேண்டும் இதைவிடுத்து ஒருகட்சியை பலவீனப்படுத்தி மற்ற கட்சியை வளர்க்க முனைந்தால் இது வெறும் கோஷமாகவே அமையும்.

பொருட்களின் விலை அதிகரிப்பு உங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்பதை நானும் அறிவேன் இருந்தும் எமது அரசுக்கு இந்நிலைமையை சமாளிக்க வேறு வழியொன்று இருக்கவில்லை கடந்த ஒன்பது வருடங்களாக மஹிந்த ராஜபக்ச அளவுக்கதிகமாக அதிக வட்டியுடன் பெற்ற கடனை அடைக்க வேண்டியுள்ளது ஆட்சிக்கு வந்தவுடன் பெற்றோல் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த எமது அரசு விரைவில் உயர்த்தப்பட்ட வரிகளையும் ரத்துச்செய்யும்

அத்துடன் அண்மையில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பிரதமரின் பாதுகாப்புக்கான வாகன கொள்வனவை மேற்கோள் காட்டி அரசு வீண் செலவு செய்கின்றது என குற்றம்சாட்டியது என்னை ஆச்சரியப்படுத்தியது ஊழல் மோசடிகள் தொடர்பாக துல்லியமாக புள்ளிவிபரங்களை வெளிவிடும் அவர் அரசின் செலவீனங்கள் குறித்து ஏன் தவறான கருத்தை கூறுகின்றார் என தெரியவில்லை. 

பிரதமரின் பாதுகாப்புக்காக கொள்வனவு செய்யப்படவுள்ள வாகனத்தின் உண்மையான பெறுமதி 128 மில்லியன் மட்டுமே ஏனைய 472 மில்லியனும் அரச வரியே அது மீண்டும் அரசாங்கத்துக்கே வந்துசேரும் எமது அரசு முன்னைய அரசைப்போல் மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதில்லை பிரதமரின் பாதுகாப்புக்கான போதியளவு வாகனங்கள் இல்லை இதனால் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரால் வாகன கொள்வனவுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது பிரதமரின் பாதுகாப்பு முக்கியமானது முன்னால் ஜனாதிபதி வாகனப்பேரணி ஒன்றை கொண்டு செல்லும்போது கேள்விகேட்க யாரும் இருக்கவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -