கட்சிகளின் பலங்களை வெளிப்படுத்தக்கூடிய மே தின கூட்டங்களே இன்று நடைபெறுகின்றன - ஷிப்லி பாறுக் MPC

M.T. ஹைதர் அலி-
ன்று நாட்டிலே நடைபெறுகின்ற மே தின கூட்டங்களில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கூட்டமாக இருக்குமாக இருந்தால் அது காத்தான்குடியிலே நடைபெறுகின்ற முச்சக்கர வண்டி சாரதிகளின் மே தின நிகழ்வாகத்தான் இருக்க முடியும் என்று கிழக்கு மாகாண உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் 2016.05.01ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இடம்பெற்றன. இன்று காலை காத்தான்குடி போலீஸ் நிலையத்திற்கு முன்பிருந்து ஆரம்பிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் ஊர்வலம் காத்தான்குடியின் பல முக்கிய வீதிகளினூடாக காத்தான்குடி கடற்கரையை சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து காத்தான்குடி கடற்கரையில் விஷேட மே தின நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாட்டின் கொழும்பு, காலி போன்ற ஏனைய இடங்களில் நடைபெறுகின்ற கூட்டங்கள் பச்சை கொடியுடைய கூட்டம் நீலக்கொடியுடைய கூட்டம் சிவப்புக் கொடியுடைய கூட்டம் என்று கட்சிகளின் பலங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு கூட்டமாக இருக்கின்றதே தவிர ஒட்டுமொத்த தொழிலாளர்களை பிரதிநிதிதுவப்படுத்துகின்ற கூட்டங்களாக அவைகள் அமையவில்லை. 

தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அக்கட்சியினுடைய பலத்தினை வெளிப்படுத்துவதற்காக அவர்களது தொழிலாளர் தின கூட்டத்தை நுவரலியாவிலே நடத்துகின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய மே தின கூட்டம் யாழ்பானத்திலே நடைபெறுகின்றது. 

தொழிலாளர் தினமான இன்று எல்லா காட்சிகளும் தங்களுடைய கட்சி சார்ந்த விடையங்களை பேச முற்படுகின்ற இந்த நேரத்திலே தொளிலாலர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே காத்தான்குடி முச்சக்கர சாரதிகள் சங்கம் இந்த மே தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்திக்கொண்டிருக்கின்றது. 

காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகளை பொறுத்த வரை மிகவும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளக்கூடியவர்கள். தமிழ்நாடு மற்றும் இலங்கையின் ஏனைய அதிகமான பகுதிகளில் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நடந்துள்ள போதிலும் காத்தான்குடியில் இதுவரை அவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெற்றதில்லை. 

இன்று நாட்டிலே நால்லாட்சி அரசாங்கமொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த வேளையிலே அவ்வாறான நல்லாட்சி அமைவதற்கு பிரதான காரணமாக அமைந்த சிறு பான்மையினரின் ஒரு முக்கிய பகுதியினராக முஸ்லிம்கள் இருக்கின்றனர். அதன்மூலமாக நாங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளோம். 

தொழிலாளர்கள் என்ற ரீதியிலே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் யாருக்கும் சோரம் போகாமலும் தனித்துவமாக நின்று இந்த அரசாங்கத்தில் எமது உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -