எம்.ஜே.எம்.சஜீத்-
ஏறாவூர் பிரதேச ஒருகிணைப்பு குழுவின் இனை தலைவராக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சுபையிர் ஹாஜியாரை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகோளின் கீழ் ஏறாவூர் பிரதேச ஒருகிணைப்பு அபிவிருத்தி குழுவின் இனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்புதிய நியமனமானது இன்று மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவினால் அவருடைய அமைச்சின் காரியாலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அமைச்சரினால் மாகாண சபை உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.