பொத்துவில் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கம் சமூக பணிகளில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இப்பிரதேச கல்வி, கலாச்சார , விளையாட்டு துறைகளில் பாரிய பங்களிப்புகளை வழங்கி வருவதுடன் தங்களின் இயக்கத்தின் ஒற்றுமையின் ஊடாக இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையும் ஏற்படுத்தி வருவதுடன், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மத்தியிலும் சிநேக பூர்வமான உறவுகளை பேணி வருகின்றனர்.
இவர்களின் சிறந்த செயற்பாடுகளுக்கு மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன். பொத்துவில் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தின் 10 வது வருட நிறைவும் , கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பொத்துவில் பசரிச்சேனை விளையாட்டு மைதானத்தில் அருகம்பே ஆட்டோ சங்கத்தின் தலைவர் ஏ.முஸம்மில் தலைமையில் நேற்று நடைபெற்ற போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னால் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய நாள் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு கோசம் எழுப்பும் நாளாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசும் தினமாகவும் உள்ளது. இந்த நாளில் பொத்துவில் பிரதேசத்தில் அருகம்பே ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் தங்களின் உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் செயற்பட்டு இப்பிரதேச விளையாட்டு கழகங்களையும் , சமூகபணி செய்தவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
கடந்த 10 வருட காலமாக அருகம்பே ஆட்டோ உரிமையாளர்களின் சங்கத்தினை பதிவு செய்வதற்கு பல அரசியல் வாதிகள் தடை விதித்து வந்தனர். பொத்துவில் பிரதேசத்தினை சேர்ந்த பிரதேச செயலாளர் ஒருவரை பொத்துவில் பிரதேச செயலாளராக நியமிக்க பொத்துவில் பிரதேச கல்விமான்களும், மக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
முன்னாள் உள்ளுராட்சி மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் ஒததுழைப்போடு நீண்டகாலத்துக்கு பிறகு பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த என்.எம்.எம்.முஸ்சரத் அவர்கள் நமது பொத்துவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் கடமையேற்ற சில தினக்களுக்குள் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினை பதிவு செய்யுமாறு சிபாரிசினை செய்ததுடன் நமது பொத்துவில் பிரதேச மக்களின் அபிவிருத்;தி பணிகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டார்.
நமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டதால் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த நமது பல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற வாய்ப்பு ஏற்பட்டது என்பதனை நாம் மறந்து விட முடியாது அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தை பதிவு செய்வதற்கு அரசியல் வாதிகளின் தடைகள் வருமானால் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.
இன்று இச்சங்கத்தின் செயற்பாடுகளில் நமது பிரதேச அடையும் நண்மைகளை எண்ணி நாம் மகிழ்ச்சி அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவரிடம் மத்திய அரசாங்க அதிகாரமும் என்னிடம் கிழக்கு மாகாண அரசியல் அதிகாரமும் இருந்த காலத்தில் பொத்துவில் பிரதேச மக்களின் நீண்டகால தேவையை அறிந்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
அரசியல் அதிகாரம் கிடைத்த போது மக்கள் நன்மை அடையக் கூடிய வகையில் அபிவிருதத்தி திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளோம். என்ற யதார்த்தங்களை இன்றும் நமது கிழக்கு மாகாண மக்கள் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இறைவனின் உதவியால் தேசிய காங்கிரஸுக்கு அரசியல் அதிகாரம்; கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொத்துவில் பிரதேச மக்களுக்கான தொடர் பணிகளை புரிவதற்கு எண்ணியுள்ளோம்.
இறுதி ஆட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பொத்துவில் வெண்டோஸ் விளையாட்டு கழகமும், அருகம்பே விளையாட்டு கழகங்கள் சிறந்த முறையில் விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளதுடன் சிநேக பூர்வமான உறவுகளையும் வளர்த்துள்ளனர் இவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகளை பாராட்டுகின்றேன் அருகம்பே ஆட்டோ சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு எப்போதும் பக்க பலமாக இருந்து உதவிகளை வழங்குவேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஷரப், முன்னாள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்பாளர் ஏ.பதூர்கான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.முபாரக், பசரிச்சேனை ஜும்மா பள்ளி வாசல் தலைவர் ஹாருன் ஹாஜியார், ஆதமலெப்பை மௌலவி உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.