ஏறாவூரின் கடந்த கால அரசியல் வரலாற்றில் பல்வேறு காலங்களில், பல்வேறுபட்ட அரசியல் தலைமைகள் தோன்றி இவ்வூரின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தங்களாலான பங்களிப்புக்களை செய்ததன் மூலம் வரலாற்றிலும் மறக்க முடியா இடத்தையும் பிடித்துள்ளனர்.
டாக்டர் பரீட் மீராலெப்பை MACA.. றகுமான், பசீர் சேகுதாவூத் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் அனைவருமே மற்றவர்கள் மீது சேறு பூசாமல் பழி சுமத்தாமால் இவ்வூரின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டனர்.
இவர்களின் வழியில் குறுகிய கால அரசியல் வரலாற்றைக் கொண்ட கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமட் அவர்களும் தனது ஊர் தனது மாவட்டம், மாகாண பிரதேசம் அபிவிருத்திகாண வேண்டும் முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் நோக்கில் பணியாற்றி மக்கள் மனதில் இடம்பிடித்து வருவதை பொறுக்க முடியாத சில வக்கற்ற அரசியல்வாதிகள் உண்மைக்கு புறம்பான பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தமது அரசியல் ஸ்திரத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்ள முனைவது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏறாவூர் ஐயன்கேணிக் கிராமத்தில் இவ்வூரின் மக்களின் நலன் கருதி ஆடைத் தொழிற்சாலை உட்பட பல தொழிற்சாலைகள் திறக்கப்படடது. இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்து திறந்து வைத்ததுடன் பல மணி நேரங்களை இவ்வூர் மக்களுடன் செலவழித்து சென்றமையும் நாடறியும், இதனை பொறுக்க முடியாத மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்கள் உண்கக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவது அவரின் கீழ் நிலை அரசியலை காட்டுகிறது.
இத்திறப்பு விழா நிகழ்வுக்கு வெளியூரில் இருந்து மக்களை அழைத்து வந்ததாகவும் உள்ளுர் மக்கள் கலந்து கொள்ளவில்லை என முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் அறிக்கைகளை விடுக்கின்றார். அன்றைய ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு ஏறாவூர் தமிழ் முஸ்லிம் மக்களே முழுமையாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேச மக்களும் ஆவளுடன் கலந்து சிறப்பித்தனரே தவிர இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல என்பதை நன்கு புறிந்து கொண்டும், பாவம் பொறாமையின் காரணமாக சுபைர் அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்கள் தனது குறுகிய காலப்பகுதியில் ஏறாவூரின் எழுச்சிக்கு தன்னாலான அனைத்து சேவைகளையும் செய்வது வெள்ளிடை மலையென இவ்வூர் மக்களுக்கு தெரியும் இவரது வேலைத்திட்டங்கள் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வீதி அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்கள் என தன்னுடைய சேவைகளை விஸ்தரித்து செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் பூனை கண்களை இருக மூடிக் கொண்டு பாலினை குடிப்பது போல் சுபைர் ஹாஜியார் விபரம் அறியாமல் பேசுவதனையும் அறிக்கை விடுவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டே நீடித்து நிலைக்கத் தக்கதான அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்துத்கின்ற செயற்பாடுகளிலேயே முன்னுரிமை கொடுத்து வருகின்றார்.
ஆனால் சுபைர் ஹாஜியாரோ கொந்துராத்து வேலைகளுக்கு கொமிஷன் காலாவதியான பால் மா பக்கட்டுக்களை வழங்குவது போன்ற ஏழை மக்களை ஏமாற்றும் செயல்களை விடுத்து உறுப்படியானவற்றை செய்ய முன் வாருங்கள்.
மேலும் ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வூரின் அரசியல் வாதிகளுக்கு எந்த அரசியல் வேறுபாடுகளுமின்றி அழைப்பு விடுக்கப்பட்டு பல அரசியல் பிரமுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஆனால் அழைப்பு விடுக்கப்பட்டும் அழைக்க வில்லையென குறைப்பட்டு நாடகமாடி நல்ல பிள்ளையாக நடிப்பது கேள்விக்குறிய விடயமாகும் கௌரவ மௌலானா எம்.பீ. அவர்கள் கூட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்து சிறப்பித்தமைக்கு இவ்வூர் மக்களை சாட்சியாகும்.
கடந்த காலங்களில் சுபைர் அவர்கள் வேலை வாய்ப்புக்களை இலட்சக்கணக்கான ரூபாவுக்கு சந்தையில் கூறி விற்றுத்திரிந்த சம்பவங்களை மறந்து விட்டார் போல் இருக்கின்றது. கோயில் பூசாரியிடம் பல இலடச்சக்கானக்கான ரூபாக்களை வேலை பெற்றத் தருவதாக பெற்றுக் கொண்டு அப்பணம் சுபைர் ஹாஜியாரால் மீளக் கொடுக்காமையினால் பாவம் அப்பாவி பூசாரி தற்கொலைக்கு முயற்சி செய்ததையும் அதுபற்றிய விடயங்கள் மக்கள் மத்தியில் இன்னும் அலசப்படுகிறது.
மேலும் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி விலாசம் கொடுத்த கௌரவ அமீர் அலிக்கோ இறுதியில் டாட்டா காட்டி விட்டு இன்று ஹிஸ்புல்லாஹ் விடம் வேசம் போட்டுக் கொண்டு திரிகின்றார். இதுதான் இவரது கடந்த கால அரிசியல் வரலாறும் இவ்வூருக்கு செய்த சேவையுமாகும்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இம்முறை நடை பெற்ற கா.பொ.த.சா.த. பரீட்சையில் பின்னடைவை சந்தித்ததாக முதலமைச்சர் மீது குற்றம் சுமத்துகிறார். இது அவரின் அறியாத்தனமும் மடமைத்தனமுமான வாதமாகும் ஏனெனில் எந்தவொரு அரசியல்வாதியும் பாடசாலைக்கு தேவையான ஆசிரியர் வளம், பௌதீக வளம் போன்ற விடயங்களைத்தான் செய்து கொடுக்கலாமே தவிர அவ்வரசியல் வாதி கற்பிக்கின்ற அல்லது பாடசாலைகளை மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகளின் கடமையை செய்ய முடியாது. என்பதை சுபைர் அவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவரும் அமைச்சர் அமீர் அலியும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தை அரசியல் மயப்படுத்தியதைப் போன்று முதலமைச்சர் அவர்கள் செய்யவில்லை என்பதை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.
முகைதீன் பாவா J.P
ஏறாவூர்.