பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச,விடம் மீண்டும் ஜூலை 01ம் திகதி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அரச சொத்துக்கள் மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தியமை சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பசில் ராஜபக்ச இன்று அழைக்கப்பட்டிருந்ததாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தனிப்பட்ட உள்ளுர் விமானப் போக்குவரத்துக்காக இலங்கை விமானப் படையின் விமானங்களை பயன்படுத்தி கம நெகும திட்டத்தின் 15 1/2 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை குறித்து அவரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 01ம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.