10 இராணுவ வீரர்கள் கைது..!

க.கிஷாந்தன்-

யில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில் 10 இராணுவ வீரர்களை, அட்டன் பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், கொழும்பு செல்வதற்காக தியத்தலாவை ரயில் நிலையத்தில் வைத்து மேற்படி பத்து இராணுவ வீரர்களும் ரயிலில் ஏறியுள்ளனர். தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையில் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் கடவையில் வேலை செய்துகொண்டிருந்த ரயில்வே பணியாளர்களை, ரயிலில் பயணித்த போது கட்டைகளாலும் பொல்கலாலும் இராணுவ வீரர்கள் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில், தலவாக்கலை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு பணியாளர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, தலவாக்கலை ரயில் நிலைய அதிகாரிகளினால் அட்டன் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டன் ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தரித்து நின்ற வேலையில் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், மேற்படி பத்து இராணுவ வீரர்களையும் அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -