உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் வீடும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேற்கிந்திய வீரர் கிரிஸ் கெய்ல், அவுஸ்திரேலியாவின் சேன்வோர்ன், இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பிரட்லீ, டேவிட் வோர்னர் , மைக்கல் கிளார்க், சேர்ன் வொட்சன், சவுரவ் கங்குலி, ரிக்கி பொண்டிங், இவர்களுடன் இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்ககாரவின் வீடும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இயற்கை எழில் மிகுந்த கண்டியில் இவரது வீடு அமைந்துள்ளதோடு,சுமார் 81 வருடங்களுக்கு முதல் இந்த வீடு வாங்கப்பட்டதாகவும் அன்றிலிருந்து இன்று வரை வெள்ளைச் சுண்ணாம்பு பூசி பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிகுவும் நேர்த்தியான முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த வீட்டிற்கு அழகு சேர்ப்பது பூந்தோட்டங்களும், பழ மரங்களும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டினுள்ளே கலையம்சங்கள் நிறைந்த பொருட்களும்,பழைய அலங்காரப் பொருட்களும் இந்த வீட்டை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குமார் சங்கக்கார பிறந்தது முதல் இன்று வரை தமது குடும்ப அங்கத்துவர்களுடன் ஒற்றுமையாக குறித்த வீட்டில வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.