கல்முனையில் உணவகங்கள் திடீர் சோதனை - 13இல் 7உணவகங்களுக்கு எதிராக வழக்கு

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீனின் பணிப்புரைக்கமைய கல்முனை பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள்) அணைத்தும் வரும் நோன்பு தினத்திற்கு முன்பதாக திடீர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி. பேரம்பலம் தெரிவித்தார்.

மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தலைமையில் பொது சுகாதார பரிசோகர்கள் மற்றும் பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் ஆகியோர் அடங்கிய குழுவினால் இப்பரிசோதனை நடைபெறவுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சம்மாந்துறையில் பிரபல்யமான உணவகங்கள் இழுத்து மூடப்பட்டது. பின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

அதுபோல் இன்றைய தினம் (04) கல்முனை நகர் புறத்திலுள்ள 13 உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் எதிர்வரும் திங்கட் கிழமை (6.6.2016) திகதி 7 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இதில் நாங்கள் எதிர்பார்ப்பது நீதிபதியின் அனுமதியுடன் மிகவும் சுகாதாரத்திற்கு கேடான 3 உணவு கையாளும் நிலையங்களை மூடுவதற்கான அனுமதி பெறுவதற்காக எதிர்பார்த்திருக்கின்றோம் என்று மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -