ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி அமைக்க 13 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐ.ம.சு.முன்னணியுடன் கூட்டுச் சேர விண்ணப்பித்துள்ள இக்கட்சிகளுடன் தற்பொழுது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.ம.சு.மு.யின் கொள்கைக்கு முரணில்லாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதில் தடைகள் இல்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டீ.பி., ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் சிஹல உறுமய, தொழிலாளர் கட்சி, டெலோ மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி என்பனவும் கூட்டுச் சேரவிருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுள் அடங்கும் எனவும் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.