திருகோணமலை-புறாத்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு வந்த 13 மீனவர்களை கடற்படையினர் சுற்றிசளைத்து குச்சவௌி பொலிஸாரிடம் நேற்றிரவு (29) 8-30 மணியளவில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரும் திருகோணமலை-இறக்கக்கண்டி பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவௌி புறாதீவு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன் பிடித்தமை மற்றும் 7 கிலோமீட்டருக்கு அப்பால் பாவிக்க கூடிய சுருக்கு வலைகளை ஒன்றரை கிலோ மீட்டருக்குள் பாவித்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 03 வள்ளங்களும்-03 இன்ஜின்களும் -80 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்