திருகோணமலை சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரையும், அடுத்தமாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம். றிஸ்வான்,நேற்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.
சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.